கடந்த 1999 ஆம் ஆண்டு அரவிந்த் சுவாமி நடிப்பில் வெளியான என் சுவாச காற்றே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தியா மிர்ஸா. கடந்த ஆண்டு, வைபவ் ரெக்கியை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை உள்ளது. சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த தியா மிஸ்ராவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், “திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக்கொள்வது இங்கு தவறாக பார்க்கப்படுகிறது. பாலியல் உறவு கொள்ளுதல் அவர்களது விருப்பம். இதைப்பற்றி முடிவு எடுக்க அவர்களுக்கு முழு உரிமையும் உண்டு. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதகரித்து வரும் இந்த காலகட்டத்தில், பெண்கள் கருகலைப்பு கூட செய்ய முடியாத நிலை உள்ளது” என்று கூறியுள்ளார்.