காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வசூல் தற்போது 50 கோடியை தாண்டி இருக்கின்றது.
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூன்று பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படம் முதலில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும், தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் வசூலை அதிகாரபூர்வமாக விக்னேஷ் சிவன் அறிவித்திருக்கின்றார்.
காத்துவாக்குல 2 காதல் படம் ரூபாய் 50 கோடிக்கும் அதிகமான வசூல் செய்திருக்கிறதாம். அவரது திட்டமே திருமணத்திற்கு முன்பே பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது தான். இந்த நிலையில் விஜய் சேதுபதியை வைத்து இயக்கிவிட்டார். இதனை அடுத்து அஜித் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கயிருக்கிறார்.