2 காவலர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சென்று கொண்டிருந்தார். அப்போது காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாசின் வாகனம் சாலையில் சென்ற போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை காவல்துறையினர் சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது போலீஸ் ஏட்டு ஒருவர் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் ஏட்டுவை ஒழுங்காக பணி செய்யுமாறு கூறி ஆபாச வார்த்தையால் திட்டியுள்ளார்.
இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆத்திரமடைந்த தேவேந்திரன் அந்த ஏட்டுவை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதனை பார்த்த சக காவல்துறையினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் தேவேந்திரனிடம் உடனடியாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.