தன் திருமணத்தை கொண்டாடும் விதமாக மணப்பெண் ஒருவர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் நிகழ்வாகும். இந்நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. அந்த வகையில் வட இந்திய மாநிலங்களில் பிரம்மாண்ட திருமண நிகழ்வின்போது துப்பாக்கியால் வானத்தை சுடுவது ஒரு சர்வ சாதாரணமான விஷயமாகி விட்டது. ஆனால் இதுபோன்ற பாரம்பரிய நிகழ்வுகள் சட்டவிரோதமாக கருதினாலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன.
ஆனால் இதுபோன்ற சம்பவங்களால் ஏற்படும் எதிர்வினைகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் இதுபோன்ற சம்பவத்தால் எதிர்பாராதவிதமாக சில உயிரிழப்புகள் கூட அரங்கேற்றி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மாலைவேளையில் தன் திருமணத்தை கொண்டாடும் விதமாக மணப்பெண் வானத்தை நோக்கி துப்பாக்கியால் மூன்று முறை சுட்டுள்ளார். இதனை அடுத்து அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.