Categories
உலக செய்திகள்

திருமணத்தில் காயங்களுடன் வந்த மணமகன்.. வைரலாகும் புகைப்படம்.. காரணம் இது தானா..!!

இந்தோனேஷியாவில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் மேலாடையின்றி கையில் கட்டுடன் பரிதாபமாக அமர்ந்திருந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  

இந்தோனேஷியாவில் உள்ள கிழக்கு ஜாவாவில் வசிக்கும் இளம்ஜோடிக்கு கடந்த 2ஆம் தேதி அன்று திருமணம் நடந்துள்ளது. அதில் அழகான உடை மற்றும் அலங்காரத்துடன் மணப்பெண் ஜொலித்துக் கொண்டுள்ளார். ஆனால் மணமகனோ கையில் கட்டுடன், மேல் சட்டை அணியாமல் பரிதாபமாக மணமகள் அருகில் அமர்ந்திருக்கிறார்.

இதனை புகைப்படம் எடுத்து யாரோ இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் லைக்குகளை அள்ளி வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை காணும் சிலர் நக்கலாக கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர். ஆனால் உள்ளூர் ஊடகம் இவர்களின் திருமணம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது, சுப்ராப்டோ என்பவருக்கும் எலிண்டா டிவி கிறிஷ்டியானி என்ற பெண்ணிற்கும் கடந்த 2 ஆம் தேதி அன்று திருமணம் நடந்துள்ளது. அப்போது மணமகன் மேல் ஆடை அணியாமல் இருந்தார். இது குறித்து மணப்பெண் கூறியுள்ளதாவது, சில நாட்களுக்கு முன் மாப்பிள்ளை பெட்ரோல் வாங்க சென்ற இடத்தில் அவருக்கு விபத்து ஏற்பட்டதால் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் அவருக்கு உடை எதுவும் அணிய முடியவில்லை. இதுமட்டுமல்லாமல் அவருக்கு விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியில் திடீரென்று சுயநினைவு இல்லாமல் போனதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |