திருமணத்தைத் தொடர்ந்து தடுத்தவரின் கடை இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கேரள மாநிலத்தில் இருக்கும் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்பின் மேத்யூ. இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்து பெண் பார்க்க தொடங்கினர். இந்நிலையில் ஆல்பினுக்கு பெண் பார்க்க வருபவர்கள் அனைவரிடமும் அதே பகுதியில் கடை வைத்திருக்கும் ஜோஷி என்பவர் தவறாக சொல்லி தொடர்ந்து நடக்க இருந்த திருமணத்தை தடுத்து வந்தார்.
இதுபற்றி ஆல்பினுக்கு ஒருநாள் தெரியவர கோபம் கொண்ட அவர் ஜோஷியிடம் தகராறு செய்ததோடு ஜேசிபி இயந்திரம் மூலமாக அவரது கடையை இடித்துத் தரைமட்டமாக்கினர். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.