Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்தை நிறுத்த முயன்ற நபர்…. மண்டபத்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

கோவைப்புதூரில் புனேவை சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். இவர் கோவையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். முன்னதாக புனேவில் வசித்த போது தனியார் நிதி நிறுவனத்தில் ஆலோசகராக வேலை பார்த்த ராஜேஷ் செட்டி என்பவர் பெண் இன்ஜினியரிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண் ராஜேஷுடன் பேசுவதையும், அவரை பார்ப்பதையும் நிறுத்திவிட்டார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயம் செய்தனர்.

நேற்று முன்தினம் கோவைக்கு வந்த ராஜேஷ் திருமணம் நடக்கவிருக்கும் மண்டபத்திற்கு சென்று பெண் இன்ஜினியரை சந்தித்து நான் உன்னை காதலிக்கிறேன். இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது நாம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை காட்டி திருமணத்தை நிறுத்தி விடுவேன் என அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருமணத்தை நிறுத்த முயன்ற ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |