நடிகை மெஹ்ரின் பிர்சாடா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2017-ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சாடா. இதையடுத்து இவர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான நோட்டா படத்தில் நடித்திருந்தார். இதன் பின் இவர் பட்டாஸ் படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தார். மேலும் நடிகை மெஹ்ரின் பிர்சாடாவுக்கு பவ்யா பிஷ்னோய் என்பவருடன் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது.
இந்நிலையில் நடிகை மெஹ்ரின் பிர்சாடா தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘நானும் பவ்யா பிஷ்னோயும் திருமணத்திற்கு முன்பே எங்கள் உறவை முடித்துக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார் . மேலும் இது தங்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்றும் இது குறித்து இனி யாரிடமும் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.