புதுவையில் நடுரோட்டில் கேக் வெட்டியதை தட்டிக்கேட்ட புது மாப்பிள்ளையை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய தம்பதியினர் உட்பட 5 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வில்லியனூர் மூர்த்தி நகரில் வசித்து வருபவர் சங்கர்- ரமணி தம்பதியினர். அவர்களது திருமண நாளை நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் கேக் வெட்டி அதிக சத்தத்துடன் கொண்டாடியதாக சொல்லப்படுகிறது. இதை எதிர் வீட்டில் வசித்து வந்த சத்தீஷ் தட்டி கேட்டதால் கோபத்தில் ரமணியின் தம்பி ராஜா வீட்டில் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சதீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த சதீஷ்க்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.