சுயம்வர பார்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறை சார்பாக சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. அதாவது சுயம்வர பார்வதி ஹோமம் நடைபெற்றது. இந்த பூஜையில் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். இதற்கு ஆராய்ச்சியாளர் சி.பொதுவுடைமூர்த்தி தலைமை தாங்கினார். இந்த பூஜையில் கலந்து கொண்டவர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் பதிவு செய்யப்பட்டு பார்வதி மந்திர உச்சாடனம் செய்யப்பட்டது. இதனையடுத்து யாகம் வளர்க்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த ஹோமத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு பூஜையை சிறப்பித்தனர்.