Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமாகாத ஏக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தினேஷ்குமார்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 31-ஆம் தேதி தினேஷ்குமார் வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக வாலிபரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தினேஷ்குமார் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரது திருமணம் தள்ளிக்கொண்டே போனது. திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த தினேஷ்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Categories

Tech |