கொள்ளிடம் அருகே உள்ள பகுதியில் திருமணம் ஆகி ஆறு மாதங்களே ஆன இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே இருக்கின்ற நல்லூர் மெயின் ரோட்டில் 30 வயதுடைய ராஜேஷ் என்பவர் வசித்துவருகிறார். டீக்கடை நடத்திவரும் அவருக்கும்,ஆயங்குடி பள்ளம் கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய ரஞ்சிதா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதா அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய படி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுபற்றி ரஞ்சிதாவின் அண்ணன் வீரமணி, தன் உடன்பிறந்த சகோதரியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ரஞ்சிதாவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ராஜேஷ் அவர்களை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நேற்று கைது செய்துள்ளனர்.அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.