Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“திருமணமாகி நான்கு மாதங்களே ஆன இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை”…. போலீசார் விசாரணை….!!!!!

திருமணமான நான்கு மாதங்களில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாகலூர் அருகே இருக்கும் முத்தாலியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரின் மனைவி வினுதா(21). இவர்களுக்கு சென்ற மார்ச் மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் வினுதாவிற்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்திருக்கின்றது.

இதற்கு மருத்துவமனைகளில் பல்வேறு சிகிச்சை அளித்தும் அவர் குணமடையவில்லை. இதனால் வினுதா மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவரின் தாயார் லட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Categories

Tech |