திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே உள்ள பாகநத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தாந்தோணிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்த சரவணன் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிமுத்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சரவணன் தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு திருமணமாகி மூன்று மாத ஆனதால் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.