Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திருமணமாகி 10 நாட்கள்தான்… தாய் வீட்டில் விருந்து… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான பத்து நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராமத்தில் ரத்தினசாமி என்பவர் வசித்துவருகிறார். அவரின் மகன் முத்துசாமிக்கும், குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் மகள் பவித்ராவுக்கும் (20) கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பவித்ரா விருந்துக்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பவித்ரா விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

அதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பெற்றோர்கள் செய்து வைத்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லாமல் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |