Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 14 நாட்கள் தான் ஆகுது… வாலிபருக்கு நடந்த விபரீதம்… நாகப்பட்டினத்தில் கோர சம்பவம்..!!

நாகப்பட்டினம் அருகே திருமணமாகிய 14-வது நாளில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கருப்பம்புலம் மேலக்காடு கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வந்தார். இவர் தற்காலிக பணியாளராக நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று வேதாரண்யத்திற்கு கரியாப்பட்டினம் செங்காத்தலை பாலத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மணக்காடு கிராமம் பிள்ளையார் குளம் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது செல்வம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது.

இந்த விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செல்வத்திற்கு திருமணம் நடந்து 14 நாட்கள் தான் ஆகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கரியாப்பட்டினம் காவல்துறையினர் செல்வத்தின் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |