திருமணமாகி 25 நாட்கள் ஆன நிலையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணாபுரம் மூன்றாவது தெருவில் வசித்து வருபவர் 29 வயதுடைய விஜயன். இவர் கால் டாக்ஸி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். இவருக்கு கடந்த 25 தினங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. இந்நிலையில் புது மாப்பிள்ளையான விஜயன் தன்னுடைய கூட பிறந்த அக்கா வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளார். அப்போதும் மது போதையில் இருந்துள்ளார்.
இதை பார்த்து விஜயன் அக்கா ஏன் அதிகமாக குடிக்கின்றாய். தற்சமயம் திருமணமாகிவிட்டது. இனிமேலாவது குடிக்காமல் இரு என்று கண்டித்தார். இதனால் கோபம் அடைந்த விஜயன் தனது வீட்டிற்கு வந்து மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமான 25 நாள்களில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.