Categories
தேசிய செய்திகள்

“திருமணமாகி 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை” ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய தம்பதி….. பெரும் சோகம்….!!!!

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் அருகே சூலகுண்டே பகுதியில் ஆட்டோ ஓட்டுனரான சந்திரசேகர் (32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா (24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை பாக்கியம் இல்லை. இவர்கள் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மிகவும் மன வருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சசிகலா மற்றும் சந்திரசேகர் உணவு அருந்திவிட்டு தூங்குவதற்காக சென்றுள்ளனர். ஆனால் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது கணவன்-மனைவி 2 பேரும் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்குகின்றனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதிகள் இருவரும் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. எனவே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி 2 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் யாருக்கேனும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் மாநில சுகாதாரத்துறை எண் 104-க்கு தொடர்பு கொள்ளவும்.

Categories

Tech |