சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சாலையில் நடந்து சென்ற பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கழனிவாசல் புகழேந்தி தெருவில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாதனா ( 29 ) என்ற மனைவி உள்ளார். இவர் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சாதனா கர்ப்பமாகி இருப்பதாகவும் அதை பரிசோதனை செய்து வருகிறேன் என்றும் தனது தாயிடம் செல்போனில் கூறிவிட்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக டி.டி.நகருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது டி.டி.நகர் 4 வீதி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த அவர் திடீரென தடுமாறி சாலையில் விழுந்தார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சாதனம் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இது குறித்து காரைக்குடி வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.