திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூங்கில்பட்டி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் பாலகிருஷ்ணன் சொந்த ஊருக்கு வந்தபோது 24 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். அப்போது பாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த இளம்பெண் அவருடன் பேசுவதை தவிர்த்துவிட்டார்.
இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பாலகிருஷ்ணன் அந்த பெண்ணை வற்புறுத்தி, நெருக்கமாக இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.