இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கொம்பாடிபட்டியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜ் இறந்துவிட்டதால் செல்வி தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது 2-வது மகள் ஸ்வேதாவுக்கு சண்முகபிரியன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதில் சண்முகப்பிரியனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் ஸ்வேதா சண்முகப்பிரியனின் உறவினர் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சண்முகபிரியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.