சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் திருமணமான பெண்கள் தான் கள்ள உறவை விரும்புகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
Gleeden என்ற நிறுவனம் டேட்டிங் இந்த ஆய்வை மேற்கொண்டது. பெண்களுக்கு உருவாக்கப்பட்ட செயலி இந்த டேட்டிங். இதில் மொத்தம் இந்தியாவில் மட்டும் 13 லட்சம் பயனாளர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் 30 முதல் 60 க்கும் மேற்பட்ட நகர்ப்புற படித்த மற்றும் நிதி ரீதியாக சுதந்திரமான பெண்களின் மனப்பான்மை பிரதிபலிப்பதாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது திருமணமாகி குழந்தை பெற்ற பெண்களில் 48% கள்ளத்தொடர்பை விரும்புகிறார்கள் என்ற அதிர்ச்சி உண்மை வெளியானது.
இந்த செய்தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள கணக்கெடுப்பின் மூலம் திருமணத்துக்கு புறம்பான உறவுகளில் ஈடுபடும் 64% பெண்களில் பாலியலில் நெருக்கம் இல்லாததாலோ அல்லது தங்களது கணவர்கள் மூலம் பாலியல் வாழ்க்கை முழுமை அடையாதவர்கள் இவ்வாறு செய்வதாக தெரிய வந்துள்ளது. திருமணத்துக்கு வெளியே காதல் தேடும் பெண்களில் 76% பேர் படித்தவர்கள், அவர்களில் 72% பேர் பொருளாதார ரீதியாக சுதந்திரமானவர்கள் அதாவது நல்ல வசதி படைத்தவர்கள் என்பது தெரியவந்தது.