Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

திருமணமான ஒரே மாதத்தில்… இளம்பெண்ணுக்கு கணவர் வீட்டில்… நேர்ந்த சோகம்…!!

இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவனந்தபுரத்தில் உள்ள கலாம்பலம் என்ற பகுதியை சேர்ந்த இளம்பெண் ஆதிரா. இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆதிரா, கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவரது கணவர் வீட்டின் கழிப்பறையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கழுத்துப்பகுதி மற்றும் மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அதில் அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. ஆனால் ஆதிராவின் பெற்றோர் மற்றும் அவரின் கணவர் குடும்பத்தினர் ஆதிரா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். எனினும் ஆதிரா கழிவறையின் கதவை உள்புறமாக தாழ்ப்பாள் போட்டபடி இறந்து கிடந்துள்ளார். மேலும் அவரின் அருகே கத்தி ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியுள்ளதாவது, ஆதிரா தற்கொலை செய்திருந்தாலும், எதற்காக இவ்வாறு முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. எனவே இது தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |