பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் , லாக் அப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை முறியடிக்கும் வகையில், அதே போன்ற ஒரு ரியாலிட்டி ஷோவை, இந்தியாவிலேயே உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, இந்த நிகழ்ச்சியை, பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரித்துள்ளார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு ‘லாக் அப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, அவரது மனதில் உள்ள ரகசியங்களை பற்றி கூறியுள்ளார். அதாவது திருமணமான ஆண்களை அனைத்து பெண்களுக்கும் பிடிக்கிறது எனவும் இதை தனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து கூறுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து திருமணமான ஆண்களும் மிகவும் பொறுப்பானவர்கள் மற்றும் புரிந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.
அதனால் தான் இளம்பெண்களை மேலும் கவர்ந்துள்ளதாக தெரிவித்தார். இதனால் என் வாழ்க்கையில் பெரிய பிரச்சனை உருவானது. இதனைத் தொடர்ந்து அவர் திருமணமான நடிகர் ஒருவருடன் தொடர்பு இருந்ததாக கூறினாரே தவிர, ஆனால் அவர் யார் என்பதை கங்கனா தெரிவிக்கவில்லை. ஆனால் சமூகவலைதளவாசிகள், அந்த நடிகர் ரித்திக் ரோஷன் என்று கூறிவருகிறார்கள். ஏனென்றால் ரித்திக் ரோஷன், கங்கனா இடையேயான உறவு பெரும் சர்ச்சையாகி,பின் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.