நமக்கு முதலில் ஏதாவது தகவல் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் முதலில் கூகுளை தான் நாடுவோம். ஒரே நாளில் பலமுறை கூகுள் தேடுபொறி பயன்படுத்தப்படுகிறது. நாம் தேடும் ஒவ்வொரு சிறிய விவரங்கள் கூட அதனுடைய சர்வரில் சேமிக்கப்படும். இந்த சூழலில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷயங்களின் பட்டியல் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படும். தனித்தனி வகைகளாக பிரிக்கப்பட்டு இந்த தேடுதல் குறித்த தகவல்களை சில ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கூகுளில் திருமணமான பெண்கள் என்ன தேடுகிறார்கள்? என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் ஆய்வின் முடிவு தெரிந்த நீங்கள் படித்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
திருமணமான பெண்கள் தங்கள் கணவரை திருப்திப்படுத்துவது குறித்து கூகுளில் அதிகம் தேடுகின்றனர் என்று சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதைத் தவிர, தனது கணவருக்கு மிகவும் பிடித்தது என்ன? கணவரை கையாள்வது எப்படி? என்ற கேள்விகள் உள்ளன. அதுமட்டுமின்றி, குடும்பக் கட்டுப்பாடு எப்போது செய்ய வேண்டும்? குழந்தை பிறக்க சரியான நேரம் எது?, வேலையையும், குடும்பத்தையும் எப்படி சமாளிப்பது? போன்ற கேள்விகளையும் திருமணமான பெண்கள் கூகுளில் தேடுகிறார்கள்.