திருமணமான பெண்ணிற்கு காதல் கடிதம் தருவது அவரது கண்ணியத்தை இழிவுபடுத்துவது சமம் எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பலசரக்கு கடை வைத்துள்ளவர் ஸ்ரீ கிருஷ்ணா. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணமான நாற்பத்தி ஐந்து பெண் ஒருவரிடம் காதல் கடிதம் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஸ்ரீகிருஷ்ணா தவாரிக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. ஆனால் இந்த அபராத தொகையை கட்ட முடியாது எனக்கூறி உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் மளிகை சாமான் பாக்கியை கேட்டதாகவும், அந்தப் பெண் பொய்யான குற்றச்சாட்டு கூறியதாக தெரிவித்தார்.
நீண்ட வருடமாக நடைபெற்ற இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் நீதிபதி கூறியுள்ளதாவது: திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுப்பது அவரது கண்ணியத்தை இழிவுபடுத்துவதற்கு சமம். மனுதாரர் காதல் கடிதம் கொடுத்தது மட்டுமல்லாமல் அவரை ஆபாசமாக பேசி காதல் கடிதம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
எனவே ஒரு பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த குற்றத்திற்காக அவருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதில் 85 ஆயிரம் ரூபாயை அந்த பெண்ணிற்கு வழங்க வேண்டும் என்றும், மீதி உள்ள 5000 ரூபாயை நீதிமன்றத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதில் மனுதாரர் 45 நாட்கள் சிறை தண்டனை இருந்தால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.