தன்னைவிட 11 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்து கொள்ளக் கூறி பெண் ஒருவர் வற்புறுத்தியதால் அந்த இளைஞன் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த சாஹிப் கான் என்பவரின் மனைவி ஹீனா. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த சுமித் குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் அந்த பெண்ணை விட பதினொரு வயது இளையவர். ஹீனா சுமித் குமாரிடம் தான் தன் கணவனை விட்டு வந்து விடுவதாகவும், நீ என்னை திருமணம் செய்து கொள் என்றும் வற்புறுத்தியுள்ளார். இதனால் தன்னைவிட 11 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு சுமித் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் ஹீனா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் தன் நண்பர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்து ஹீனாவை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். அவரது வீட்டில் நகை பணம் இருப்பதால் அவரைக் கொன்றுவிட்டு அந்தப் பணத்தை எடுத்துச் சென்றுவிடலாம் என்றும் திட்டம் போட்டு உள்ளனர். அதன்படி சில தினங்களுக்கு முன்பு சாகிப் வீட்டில் இல்லாத நேரத்தில் சுமித் அங்கு சென்று அவரது நண்பர்கள் அமீத், அருண், ரவி ஆகியோர் உதவியுடன் ஹீனாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு பணம் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இந்த வழக்கில்தான் சிக்கி விட கூடாது என்பதற்காக சுமித் மீண்டும் வந்து ஹீனாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். ஹீனா ஏற்கனவே இறந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சுமித் பயத்தில் அனைத்தையும் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அருண், ரவி ஆகியோரிடமும் விசாரணை செய்து கைது செய்துள்ளனர்.