உசிலம்பட்டியில் அதிமுக எம்எல்ஏ திருமணமான தம்பதியை வீட்டில் அடைத்து வைத்து விடிய விடிய கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே பல கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். தினம் தோறும் தொடர்ந்து தற்கொலைகள், கற்பழிப்பு, கொடூர கொலை என பல்வேறு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு கூட மிகவும் அச்சப்படுகிறார்கள்.
இந்நிலையில் இன் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ நீதிபதி, நேற்று முன்தினம் இரவு முருகன் மற்றும் அவரது மனைவி சுகந்தி ஆகியோரை தனது வீட்டில் அடைத்து வைத்து விடிய விடிய கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து இருவரும் தப்பி வந்து உசிலம்பட்டி காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் முருகன் மனைவியை தாக்கியதில் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.