Categories
மாநில செய்திகள்

திருமணமான பெண் கொலை …2 மாதங்களாக வீட்டில் வேலை செய்த தச்சனின் கொடூர செயல் ..!காரணம் என்ன ?

லக்னோவில் திருமணமான பெண்ணை  வீட்டில் வேலை பார்த்து வந்த தச்சன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

லக்னோவை சேர்ந்த ருச்சி அகர்வால் என்ற பெண் கணவருடன் வசித்து வந்துள்ளார்.அவரின் வீட்டில் குல்பம் என்ற தச்சன் 2 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ருச்சி வீட்டில் தனியாக இருந்த போது திடீரென்று தட்சன் ருச்சியிடம் வந்து தான் சொந்தமாக தொழில் தொடங்க போவதாகவும் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அப்போது ருச்சி தன் கணவரிடம் பேசிக்கொண்டு இருந்ததால் கொஞ்சம் பொறு  என்று கூறியுள்ளார்.

ஆனால் அதற்குள் குல்பம் கத்தியால் மார்பில் அவரை வெறித்தனமாக குத்தியுள்ளார். ருச்சியின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தவுடன் குல்பம் அங்கிருந்து தப்பித்து விட்டான். இதன் பிறகு பலத்த காயமடைந்த ருச்சியை மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த போது  அவர்  இதயத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி ருச்சி இறந்துவிட்டார்.

சம்பவமறிந்த போலீசார் குற்றவாளியான தட்சனை கைது செய்து  விசாரித்த போது குல்பம் தான் கத்தியை காட்டி மிரட்ட  நினைத்ததாகவும் ஆனால் தன்னை அறியாமல் ஆத்திரத்தில் குத்தி விட்ட்டதாகவும் கூறியுள்ளார் .

Categories

Tech |