Categories
தேசிய செய்திகள்

திருமணமான பெண் மற்றொரு “ஆணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது”…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

ஐகோர்ட் அதிரடியாக உத்தரவு ஒன்றை விடுத்துள்ளது.

ஜார்க்கண்டில் உள்ள ஒரு பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு மனிஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மணிஷ்  அந்த பெண்ணை தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று வந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அதனால் இவர்கள் பல முறை பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணும் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் மனிஷ் அதற்கு மறுத்துள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண்  காவல் நிலையத்தில் மணிஷ் மீது புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை எதிர்த்து மணீஷ் குமார் ஜார்கண்டில் உள்ள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு  நீதிபதி சஞ்சய் திவிதேவி தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது, “அந்த பெண்ணிற்கு தனக்கு ஏற்கனவே திருமணமானது தெரியும். ஆனாலும் இது போன்ற உறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த வழக்கை பலாத்கார பிரிவின் கீழ் வாதத்திற்காக அடிப்படையாக  ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த வழக்கை கீழ் கோர்ட் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் திருமணமான ஒரு பெண்ணை ஒரு ஆண் கவர்ந்திழுக்க முடியாது. எனவே இந்த செயலை பலாத்காரமாக எடுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |