நெல்லையில் இளம் பெண்ணிடமிருந்து மர்ம நபர்கள் தங்க நகையை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் குமார் என்பவர் அவருடைய மனைவியான அபிராமி என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தம்பதியர் இருவரும் அவர்களுடைய பைக்கில் தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் திருநெல்வேலியிலிருக்கும் பாறைக்குளம்அருகே வந்தபோது தம்பதியருக்கு பின்னால் 2 அடையாளம் தெரியாத நபர்கள் பைக்கில் வந்துள்ளனர்.
அப்போது திடீரென்று குமாருடைய மனைவி அணிந்திருந்த 61/2பவுன் நகையை பறித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தம்பதியர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையின் அடிப்படையில் காவல்துறையினர் ரமேஷ் என்ற வாலிபரை கைது செய்துள்ளனர்.