Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை… காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!!!

திருமணமான இரண்டு வாரத்தில் புது மாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த கோபால்(22) என்பவர் கட்டிடங்களுக்கு சென்டரிங்  செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் வினோதினி(25) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில்  இருவரும் திருப்பூர் சந்திராபுரம் முதல் வீதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து  கோபாலின் பெற்றோரிடம் வினோதினி பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால்  தன்னுடைய பெற்றோரிடம் பேசும் படி கோபால் தனது மனைவியை வற்புறுத்தியதால் வேதனையடைந்த மனைவி அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது கையை கிழித்து கொண்டதாக தெரிகிறது. இதனை நினைத்து  மிகுந்த மனவேதனை அடைந்த கோபால் இரவு அனைவரும் தூங்கிய பின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோபாலின்  உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம்  குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |