Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திருமணமான 20 நாட்களில்….. புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. விருந்துக்கு சென்ற இடத்தில் சோகம்….!!

திருமணமான 20 நாட்களில் வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அம்பேத்கர் நகரில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிவகுமாருக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் ஆட்டையாம்பட்டியில் இருக்கும் சின்ன மாமனார் வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளனர். இதனை அடுத்து மாலை நேரத்தில் சிவக்குமார் சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் அப்பகுதியில் இருக்கும் குட்டைக்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக சிவகுமார் குட்டையில் மூழ்கி தொடங்கினார்.

இதனை பார்த்த சரஸ்வதி அலறி சத்தம் போட்டுள்ளார். இதனால் உறவினர்கள் சிவக்குமாரை மீட்க முயற்சி செய்தும் அவர் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிவகுமாரின் சடத்தை கைப்பற்றினார். அதன்பின் காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |