Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான 3 நாட்களில்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் எம்.பி.ஏ பட்டதாரியான உதயா என்பவர் வசித்து வருகிறார். இவர் காட்டுப்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனிதா என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அனிதாவின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர்.

இதனால் கடந்த 6-ஆம் தேதி ராயபுரத்தில் இருக்கும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அனிதா உதயாவை பதிவு திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு உதயாவின் வீட்டின் மேல்தளத்தில் இருக்கும் குடிசை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அனிதாவின் பெற்றோர் தங்களது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு உதயாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அனிதா தனது வீட்டு கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 3 நாட்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |