திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பட்டாபிராம் டிரைவர்ஸ் காலனி 4-வது தெருவில் அகிலன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிண்டியில் இருக்கும் குடிநீர் வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அகிலனுக்கு உறவினர் பெண்ணான ரோஷினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ரோஷினி அண்ணா நகரில் இருக்கும் தனியார் கல்லூரியில் எம்.காம் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ரோஷினி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரோஷினியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரோஷினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.