Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமான 3-வது நாளில்….. புது மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

திருமணமான மூன்று நாளில் புதுப்பெண் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 39 வயதுடைய பட்டதாரி வசித்து வருகிறார். கடந்த 8-ஆம் தேதி இவருக்கும் 33 வயதுடைய பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 16-ஆம் தேதி புதுமண தம்பதியினர் துணி எடுப்பதற்காக ஒப்பந்தக்கார வீதியில் இருக்கும் ஜவுளி கடைக்கு சென்றுள்ளனர் இந்நிலையில் துணிகளை தேர்வு செய்து கொண்டிருந்த பெண் திடீரென காணாமல் போய்விட்டார்.

இதனால் புது மாப்பிள்ளை தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து புதுமாப்பிள்ளை கோவை பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருமணமான 3 நாட்களில் காணாமல் போன புதுபெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |