காணாமல் போன புதுப்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள கீழக்கோரைப்பட்டி கிராமத்தில் தையல் தொழிலாளியான பழனிச்சாமி(39) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி(19) என்ற பெண்ணுக்கும் கடந்த 29-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை நேரத்தில் இருந்து ரேவதியை காணவில்லை.
இதனால் பழனிச்சாமியின் உறவினர்கள் ரேவதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் பழனிச்சாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமான 4 நாட்களில் காணாமல் போன பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.