Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதத்தில்…. தாய் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயம்…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெற்கு கழுகுமலை ஓம் சக்தி நகரில் விஜயராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு விஜயராஜுக்கு கழுகுமலை காமராஜர் நகர் 3-வது தெருவில் வசிக்கும் நாகராஜன் மகள் கிரிஜா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 22-ஆம் தேதி கிரிஜா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து தெற்கு கழுகுமலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கிரிஜா வீட்டிற்கு வரவில்லை.

இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதுகுறித்து நாகராஜன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |