பீகாரில் திருமணமான 5 நாட்களில் மணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், மஞ்சாகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தனது காதலனுடன் சென்றுவிட்டது. பின்னர் பெற்றோர்கள் அந்தப் பெண்ணை அழைத்து வந்து வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து ஐந்து நாட்களில் மீண்டும் அந்த பெண் காதலனுடன் ஓடி விட்டார்.
இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும் என்று கணவர் மஞ்சார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தனது புகாரில் மணமகன் கூறியதாவது:” நான் பிப்ரவரி 22ஆம் தேதி 2021 அன்று மஞ்சாகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். திருமணத்திற்கு முன்பு நிச்சயம் முடிந்து அந்த பெண் காதலனுடன் ஓடி விட்டார். இதையடுத்து பெண் வீட்டாரின் கட்டாயத்தின் காரணமாக அந்த பெண்ணை வரதட்சிணை ஏதும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டேன். திருமணம் முடிந்து ஐந்து நாட்களே ஆன நிலையில் மீண்டும் அந்தப் பெண் தனது காதலனுடன் ஓடிவிட்டார். இந்த வழக்கை விசாரித்து தனக்கு நீதி வாங்கித் தருமாறு” அவர் தெரிவித்துள்ளார்.