Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருமணமான 5 நாட்களில்….. கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த இளம் பெண்….. தென்காசியில் பரபரப்பு…..!!!!

இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையம் அருகே துப்பாக்குடி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து சிறிது தூரம் உள்ள ஒரு ஓடையில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதைப்பார்த்த சிலர் ஆழ்வார்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், சடலமாக கிடந்த பெண் இசக்கி செல்வி என்பது தெரிய வந்துள்ளது.

இவர் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவருடைய மகள் ஆவார். கடந்த 31-ஆம் தேதி இசக்கி செல்விக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. கடந்த 1-ம் தேதி இசக்கிசெல்விக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில், திடீரென காலை அவர் மாயமாகிவிட்டார். உடனே இசக்கி செல்வியை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது இசக்கி செல்வி வேறொரு வாலிபரை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த திருமணத்திற்கு இரு வீட்டாரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், இசக்கி செல்வி தன்னுடைய கணவருடன் கோவிலூத்து பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறிய இசக்கி செல்வி அதன் பின் வீடு திரும்பவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் மறுநாள் இசக்கு செல்வி ஓடையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் இசக்கு செல்வியை ஒரு வாலிபர் இருசக்கர வாகனத்தில் வைத்து அழைத்துச் சென்றதாக சிலர் கூறியுள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆன 5 நாட்களில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |