Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திருமணமான 5 மாதங்களில்…. புதுமாப்பிள்ளையின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!!

புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சாந்தநாதபுரத்தில் இருக்கும் விடுதியில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஆனந்துக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விடுதியில் வைத்து ஆனந்த் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த போலீசார் ஆனந்த் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |