Categories
சினிமா தமிழ் சினிமா

“திருமணமான 5-வது நாளே இப்படி பண்ணிட்டீங்களே மகாலட்சுமி….?”…. விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

ரவீந்தர் இன்ஸ்டா பதிவை பார்த்த நெட்டிசன்கள் திருமணமாகி ஐந்தாவது நாளே இப்படி பண்ணிட்டீங்களே என கூறி வருகின்றார்கள்.

விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ரவீந்தர் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கின்றார். அதில் மகாலட்சுமி கழுத்தில் தாலி இல்லை. இதை பார்த்த நெட்டிசன்கள் கல்யாணமான ஐந்தாவது நாளே தாலியை கழட்டி ஆச்சா? பணத்திற்காக நடந்த திருமணம் என்பது நன்றாக தெரிகின்றது என கூறுகின்றார்கள்.

https://www.instagram.com/p/CiINxcipmjb/?utm_source=ig_embed&ig_rid=35073fd7-3095-456c-95a7-85ca6192ce1d

Categories

Tech |