தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான சுரேஷ்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுரேஷுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கீழானூர் கிராமத்தில் ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சுவரின் ஒரு பகுதி இடிந்து சுரேஷ் மீது விழுந்தது.
இதனால் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.