இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், கிருஷ்ணாபுரம் பகுதியில் சதிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைபாஸ் சாலையில் கடப்பாகல் விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேவிகா தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுண் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேவிகாவின் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தேவிகா தற்கொலை செய்து கொண்டதருக்கு காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றார் மேலும் இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.