புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள பளையம்பட்டி பகுதியில் ராஜபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாபூரணி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திவ்ய பூரணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.