தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆனைகுளம் கிராமத்தில் கலையரசன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்காசியில் இருக்கும் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் கலையரசன் மோட்டார் சைக்கிளில் தென்காசியை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சுரண்டை- சாம்பவர்வடகரை சாலையில் சுந்தரபாண்டியபுரம் விலக்கு அருகே சென்றபோது கலையரசனின் மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கலையரசன், மோபட்டை ஒட்டி வந்த மூர்த்தி ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் கலையரசன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.