கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.புதூர் கிராமத்தில் தச்சரான பசுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பசுபதிக்கும், கோகிலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பசுபதி வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அத்திகானூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பனைமரத்தின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த பசுபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பசுவதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.