Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான 7 மாதத்தில்…. மர்மமாக இறந்த கர்ப்பிணி… தாயின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் நகரில் தேவசகாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் மூத்த மகளான பிரதீபாவுக்கும், ஜேம்ஸ் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த பிரதீபா நேற்று முன்தினம் குளியல் அறையில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருப்பதாகவும் ராணிக்கு ஜேம்ஸ் செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பிரதீபாவின் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது பிரதீபா இறந்துவிட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக ராணி அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ஜேம்ஸ் வீட்டுக்கும் எங்கள் வீட்டுக்கும் வரதட்சணை விஷயமாக சில நாட்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு வந்த பிரதீபாவை கடந்த 21-ஆம் தேதி ஜேம்ஸ் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகு எனது மகள் குளியல் அறையில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறினர். வந்து பார்த்தால் எனது மகள் இறந்து விட்டதாக கூறுகின்றனர். எனது மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |