Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திருமணமான 8 நாளில்…. பெண் எடுத்த முடிவு….. குழப்பத்தில் குடும்பத்தினர்…!!

திருமணம் முடிந்து எட்டு நாளில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் சூலூர் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன். இவரது மகள் பவித்ரா டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். படிப்பு முடிந்ததும் இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகள் குடும்பத்தினரால் செய்யப்பட்டது.  இதனையடுத்து வேல்முருகன் என்பவருக்கு கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி பவித்ராவை திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கணவன் வீட்டிற்கு சென்ற பவித்ரா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இது குடும்பத்தினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று பவித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்து 8 நாட்களில் பெண் தற்கொலை செய்துகொண்டதால் ஆர்டிஓ விசாரணை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |