Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் ஆகாத ஏக்கம்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படப்பகுளம் பகுதியில் ரோஸ்மேரி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவரும் மகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதனால் ரோஸ்மேரி தனது மகன் வினுராஜூடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த வினுராஜூவை அவரது தாயார் கண்டித்துள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் பெண் பார்த்தும் வினுராஜூக்கு சரியான வரன் அமையவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த வினுராஜூ நேற்று முன்தினம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினுராஜூ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |